கோஹ்லி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா – வெளியான அதிரடி தகவல்!!

0

சில காலங்களாகவே டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் ஜடேஜா. தற்போது டெஸ்ட் போட்டியில் சிறந்த சராசரி வைத்திருக்கும் வீரர்களின் பெயர் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியா அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித்தை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் ஜடேஜா.

டெஸ்ட் போட்டிக்கான சராசரி:

கடந்த சில நாட்களாகவே இந்தியா அணி வீரர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அதில் குறிப்பாக இந்தியா அணியின் கேப்டன் கோஹ்லி, அதிரடி ஆட்டக்காரர் ரோஹித், ரஹானே, மயங்க் அகர்வால் மற்றும் ஜடேஜா இவர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜடேஜாவின் ஆட்டம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜடேஜா முந்தைய காலங்களில் பீல்டங் மற்றும் பௌலிங்கில் மட்டுமே சிறப்பாக விளங்கி வந்தார். அவரது பேட்டிங் பேசப்படும் அளவிற்கு இல்லை. கடந்த 2018ல் நடத்த ஐபில் போட்டிகளில் இருந்து இவர் தனது பேட்டிங்கிலும் முழு கவனத்தை செலுத்தி வந்தார். மேலும் பேட்டிங்க்காக தனி பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். அதற்கு பலன் அளிக்கும் வகையில் தற்போது பேட்டிங்கில் சிறப்பாக விளங்கி வருகிறார்.

மேலும் கடந்த 2018ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இவரது அதிரடியான ஆட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். பௌலிங்க்கு இணையாக பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டியில் சிறந்த சராசரி வைத்திருக்கும் பேட்ஸ்மேன்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

யாரும் எதிர் பாராத வகையில் கோஹ்லி மற்றும் ரோஹித்தை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.இவரது சராசரி 57.15 ஆகும். இவர் கடந்த 2018ம் ஆண்டுகளில் இருந்து 20 இன்னிங்ஸ் விளையாடி அதில் 743 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதில் 1 சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டாவது இடத்தில ரோஹித் சர்மா உள்ளார். இவர் விளையாடிய 14 இன்னிங்ஸில் 740 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 56.92 ஆகும். 3வது இடத்தில கோஹ்லி உள்ளர். இவர் விளையாடிய 41 இன்னிங்ஸில் 2050 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 52.5 ஆகும். மேலும் 4 மற்றும் 5 வது இடங்களில் மயங்க் அகர்வால் சராசரி 50.00 மற்றும் ரஹானே சராசரி 41.38 அடுத்தடுத்த இடத்தில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here