இறுதிப் போட்டியில் பெங்களூரு vs ஏடிகே மோகன் பகான்…, கோப்பையை வெல்லப்போவது யார்??

0
இறுதிப் போட்டியில் பெங்களூரு vs ஏடிகே மோகன் பகான்..., கோப்பையை வெல்லப்போவது யார்??
இறுதிப் போட்டியில் பெங்களூரு vs ஏடிகே மோகன் பகான்..., கோப்பையை வெல்லப்போவது யார்??

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பெங்களூரு அணிக்கு எதிராக ஏடிகே மோகன் பகான் அணி மோத உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 11 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக கொண்டு நடைபெற்றது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகளில் விளையாடிய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, பிளே ஆப் மற்றும் அரையிறுதி போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்த, ஏடிகே மோகன் பகான் மற்றும் பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை 9 சீசன்களை கடந்துள்ள இந்த இந்தியன் சூப்பர் லீக் தொடரில், கொல்கத்தாவின் ஏடிகே மோகன் பகான் அணியானது அதிக (3) முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக திகழ்கிறது.

வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன்…, கிடைப்பதை நழுவ விடும் சூர்யகுமார் யாதவ்.., அணியில் யாருக்கு இடம்??

பெங்களூர் அணி கடந்த 2019 ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், 4 வது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஏடிகே மோகன் பகான் அணியும், 2வது முறை பட்டத்தை வெல்ல பெங்களூரு அணியும் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த இரு அணிகளும், 6 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், 4 முறை ஏடிகே மோகன் பகான் அணியும், ஒரு முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை போட்டியானது டிராவாகி உள்ளது. இதனால், இந்த இறுதிப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here