வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன்…, கிடைப்பதை நழுவ விடும் சூர்யகுமார் யாதவ்.., அணியில் யாருக்கு இடம்??

0
வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன்..., கிடைப்பதை நழுவ விடும் சூர்யகுமார் யாதவ்.., அணியில் யாருக்கு இடம்??
வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன்..., கிடைப்பதை நழுவ விடும் சூர்யகுமார் யாதவ்.., அணியில் யாருக்கு இடம்??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானதை அடுத்து, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கருத்துகள் வலுத்து வருகின்றன.

சூர்யகுமார் யாதவ்:

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று, தொடரை வெல்ல 1-0 என தக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் விலகி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், களம் இறங்கினார். ஆனால் இவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கிடம் டக் அவுட்டாகி வெளியேறினார். இதானல், வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கொடுக்கலாம் என கருத்துகள் வலுத்து வருகின்றன.

IND vs AUS: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கைகொடுத்த மும்பை…, சில சுவாரசிய தகவல்கள் உள்ளே!!

மேலும், சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் நம்பர் 1. பேட்டராக திகழ்ந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சற்று தடுமாறியே வருகிறார். இதனால், எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற வேண்டுமானால், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், சஞ்சு சாம்சனுக்கும் திறமை வெளிப்படுத்த இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here