ஒடிசா அணியிடம் வீழ்ந்த ஹைதராபாத்…, தோற்றாலும் டாப் ஆர்டரை தக்க வைத்த அணி!!

0
ஒடிசா அணியிடம் வீழ்ந்த ஹைதராபாத்..., தோற்றாலும் டாப் ஆர்டரை தக்க வைத்த அணி!!
ஒடிசா அணியிடம் வீழ்ந்த ஹைதராபாத்..., தோற்றாலும் டாப் ஆர்டரை தக்க வைத்த அணி!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், 2வது இடத்தில் உள்ள, ஹைதராபாத் அணியானது, ஒடிசா அணியிடம் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தியன் சூப்பர் லீக்

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிக்கட்ட லீக் சுற்றில் நேற்று, ஒடிசா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இரு அணிகளும் முதல் 30 நிமிடங்கள் வரை ஒரு கோலுக்காக கடுமையாக போராடினர். இதையடுத்து, 33 வது நிமிடத்தில் வேகம் காட்ட தொடங்கிய ஒடிசா அணியின் இசக் வன்லால்ருட்ஃபேலா அசத்தலான கோல் ஒன்றை அடித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்


இதனை தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் நிம் டோர்ஜி தமாங் ஆட்டத்தின் முதல் பாதி நேர முடிவில் (45′) ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியின் 72 வது நிமிடத்தில், ஹைதராபாத்தின் நிம் டோர்ஜி தமாங், சேம் சைட் கோல் அடித்தார்.

சொந்த மண்ணில் கோட்டை விட்ட அணி…, 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்த சோகம்!!


இதனால், ஒடிசா அணியின் கோல் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. இந்த ஆட்டம் முடியும் கடைசி நேரத்தில் (90+4), ஒடிஷாவின் டியாகோ மரடோனா கோல் ஒன்றை அடித்தார். இதன் மூலம், ஒடிசா அணியானது, 3-1 என்ற கோல் கணக்கில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில், ஹைதராபாத் அணி தோற்றாலும் 36 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஒடிசா அணி 27 புள்ளிகளுடன் 6 வது இடத்தையும் தக்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here