கொரோனா பரவல் எதிரொலி – ஈராக்கில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!!

0

கடந்த சில நாட்களாகவே இராக்கில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது ஈராக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராக்:

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது. சுமார் 1 ஆண்டுக்கும் மேலாக இந்த வைரஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின் மாற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது வரை எந்த உலக நாடும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளவில்லை என்பது வேதனைக்குரியதே. தற்போது சில நகரங்களில் கொரோனாவின் தாக்கம் திடிரென்று உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இராக்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இராக்கில் கொரோன பரவலை குறைப்பதற்காக ஊரடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை’ – மாநில அரசு அதிரடி!!

அதன்படி இராக்கில் வருகிற 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமை அப்போது முழு ஊரடங்கும் மற்றும் மீதமுள்ள நாட்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கும் பிறப்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இராக்கில் 4,468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7,31,016 ஆகாதிகரித்துள்ளது.மேலும் நேற்று ஒரே நாளில் 24 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 6,64,461 பேர் குணமாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here