‘மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை’ – மாநில அரசு அதிரடி!!

0

மத்திய பிரதேசத்தில் மத சுதந்திர மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி எவரேனும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசம்:

தற்போதைய காலங்களில் தாழ்த்தப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றத்தில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் பல சட்டங்களை அரசு எடுத்து வருகிறது. மேலும் லவ் ஜிகாத்தை தடுப்பதற்கு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி அன்று அவசர சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இதற்கு மாறாக மாநில சட்டசபையில் கடந்த 1ம் தேதி அன்று மத சுதந்திர சட்ட மசோதாவை தாக்கல் செய்தனர். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ.,கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பின்பு இதற்கு குரல் ஓட்டெடுப்பு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சட்டத்தின் படி ஒருவர் மதம் மாற விரும்பினால் சுமார் 60 நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மத போதகரும் மாவட்ட நிர்வாகிகளுடன் தகவல் அளிக்க வேண்டும். மேலும் எவரையாவது கட்டாயப்படுத்தியோ ஏமாற்றியோ மதம் மாற்றம் செய்தால் அவருக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!

மேலும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றம் செய்தால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here