IPL லில் இந்திய வீரருக்கும் மட்டுமே அனுமதி…, பிசிசிஐயின் அதிரடி முடிவு?? வெளியான தகவல்!!

0
IPL லில் இந்திய வீரருக்கும் மட்டுமே அனுமதி..., பிசிசிஐயின் அதிரடி முடிவு?? வெளியான தகவல்!!
IPL லில் இந்திய வீரருக்கும் மட்டுமே அனுமதி..., பிசிசிஐயின் அதிரடி முடிவு?? வெளியான தகவல்!!

பிசிசிஐயானது, ஐபிஎல்-லின் புதிய விதிப்படி இந்திய வீரர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் அப்டேட்:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தொடராக ஐபிஎல் உள்ளது. இவர்களின் ஆர்வத்தால், நடப்பு ஆண்டில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்பாக ஐபிஎல் முதலிடம் பிடித்தது. அடுத்த வருடம் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் லீக்குக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெற இருப்பதால், யார் யார் எந்த அணியில் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கு ஏற்றாற் போல், பிசிசிஐயையும் ஐபிஎல் குறித்த அப்டேட்டை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் ஐபிஎலுக்கான ‘இம்பாக்ட் பிளேயர்’ என்ற புதிய விதியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த வீதியானது, ஆட்டத்தின் முதல் பாதியில் விளையாடிய ஒரு வீரருக்கு பதிலாக, மாற்று வீரரை 2 வது பாதியில் பயன்படுத்தி கொள்ளலாம் என்பதாகும்.

நாட்டில் 18-25 வயது ஆண்களுக்கு இலவச ஆணுறை., ஜன.1 முதல் வழங்க முடிவு! பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு!!

அதாவது, பந்துவீச்சில் அதிரடியாக செயல்படுபவர், பேட்டிங்கில் அதிகமாக சோபிக்க மாட்டார். இதனால், ஒரு பாதியில், அந்த ஒரு வீரரை பந்து வீச்சுக்கு பயன்படுத்தி விட்டு, அடுத்த பாதியில் வேறு வீரருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்பதாகும். இதில், மாற்று வீரராக தேர்வு செய்யப்படும் வீரர், இந்திய வீரராக மட்டுமே இருக்க வேண்டும் என்று பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறாக வெளிநாட்டு வீரர்களை மாற்ற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்திய வீரர்களை ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here