இந்த அணிகளுக்கு மட்டும் தான் பிளே ஆஃப்புக்குள் நுழைய வாய்ப்பு…, வெளியான புள்ளிவிவரம்!!

0
இந்த அணிகளுக்கு மட்டும் தான் பிளே ஆஃப்புக்குள் நுழைய வாய்ப்பு..., வெளியான புள்ளிவிவரம்!!
இந்த அணிகளுக்கு மட்டும் தான் பிளே ஆஃப்புக்குள் நுழைய வாய்ப்பு..., வெளியான புள்ளிவிவரம்!!

ஐபிஎல் தொடருக்கான 16 வது சீசனில், கொல்கத்தா அணிக்கு எதிராக CSK அணியின் தோல்வியினாலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக RCBயின் வெற்றியினாலும், புள்ளிப் பட்டியல் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்து உள்ளது. அதாவது, ஓர் அணி லீக் சுற்றில் 16 முதல் 18 வரை புள்ளிகள் பெற்றிருந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி விடும். ஆனால், தற்போது வரை குஜராத் அணி மட்டுமே 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நேற்று நடந்த போட்டிகளால், CSK 15, MI 14, LSG 13 மற்றும் RCB 12 புள்ளிகளுடன் டாப் 5 இடத்தையும் பிடித்துள்ளனர். இதில், CSK அணிக்கு மீதம் ஒரே ஒரு லீக் போட்டி மட்டுமே உள்ளதால் அதனை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 2 இடத்திற்கு தான் கடுமையாக போட்டி நடைபெற்று வருகிறது. அதாவது, மும்பை (MI), லக்னோ (LSG) மற்றும் பெங்களூர் (RCB) அணிகள் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 3, 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளனர். இதில், மும்பை அணியானது நாளை லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

IND vs AUS உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு இந்த விதி கிடையாதா?? ஐசிசியின் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும். தோல்வி அடையும் அணி புள்ளிப்பட்டியலில் சரிவை சந்திக்கும். இதன் மூலம், RCB அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப்புக்கு முன்னேற அதிக வாய்ப்புக்கு இருக்க கூடும். மேலும், RR (12), KKR (12), PBKS (12) பிளே ஆஃப்புக்கான போட்டியில் இருந்தாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து தான் வாய்ப்பை பெற முடியும். ஆனால், SRH (8) மற்றும் DC (8) இந்த வாய்ப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here