புதிய அந்தஸ்தை அடைந்த IPL.. பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா?? முழு விவரம் உள்ளே!!

0
புதிய அந்தஸ்தை அடைந்த IPL.. பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா?? முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் 10 அணிகளுக்கு இடையே ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். தற்போது இத்தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி எது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் புதிய மைல் கல்லை எட்டி உள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் பிராண்டு மதிப்பு 28% சதவீதம் அதிகரித்து உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு தற்போது $10.7 பில்லியனாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அணிகளின் பிராண்ட் மதிப்பை கீழ்க்கணலாம்.

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு :

மும்பை இந்தியன்ஸ் (MI) – $87 மில்லியன்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – $81 மில்லியன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) – $79 மில்லியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) – $70 மில்லியன்
குஜராத் டைட்டன்ஸ் (GT) – $65 மில்லியன்
டெல்லி கேபிட்டல்ஸ்(DC) – $64 மில்லியன்
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) – $63 மில்லியன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) – $48 மில்லியன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) – $47 மில்லியன்
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) – $45 மில்லியன்

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி., ஊதியத்துடன் கூடிய விடுமுறை? தேர்தல் ஆணைய அதிகாரி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here