IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி பஞ்சாப்.., பலம் வாய்ந்த SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 9) மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் 23 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க பஞ்சாப் அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.

அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த முறை 3 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ள நிலையில், அதில் ஹைதராபாத் அணி 14 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை ஹைதராபாத் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

CSK vs KKR 2024: படுத்தே விட்டானையா.. ட்ரெண்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here