
ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஐபிஎல்:
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, தனது 10 வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி பில்டிங் செய்ய களமிறங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனவே, தொடக்க வீரர்களாக ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (14) மற்றும் ஜோஸ் பட்லர் (8) களமிங்கி சொற்பரன்களிலேயே வெளியேறினார். இவர்களை தொடர்ந்து, வந்த வீரர்கள் அனைவரும் குஜராத்தின் ரஷித் கான் (3), நூர் அகமது (2) உள்ளிட்டோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், ராஜஸ்தான் அணி, 17.5 ஓவரில் 118 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நீ தான் ஜெனிய தள்ளி விட்டாயா? ராதிகா மீது பழி போடும் ஈஸ்வரி.., அதிர்ந்துபோன குடும்பத்தார்!!!
இதையடுத்து, எளிதில் அடைய கூடிய இந்த இலக்கை துரத்திய, குஜராத் அணி, 13.5 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 119 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், சுப்மன் கில் 36, விருத்திமான் சாஹா 41*, ஹர்திக் பாண்டியா 39* ரன்கள் எடுத்திருந்தனர். இந்த வெற்றியால், குஜராத் டைட்டன்ஸ் அணி, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில், 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.