நீ தான் ஜெனிய தள்ளி விட்டாயா? ராதிகா மீது பழி போடும் ஈஸ்வரி.., அதிர்ந்துபோன குடும்பத்தார்!!!

0
நீ தான் ஜெனிய தள்ளி விட்டாயா? ராதிகா மீது பழி போடும் ஈஸ்வரி.., அதிர்ந்துபோன குடும்பத்தார்!!!
நீ தான் ஜெனிய தள்ளி விட்டாயா? ராதிகா மீது பழி போடும் ஈஸ்வரி.., அதிர்ந்துபோன குடும்பத்தார்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் செழியன் தன்னுடைய கிளைண்ட் மாலினி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் ஜெனி வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி எல்லோருக்கும் கால் செய்ய ஆனால் யாருமே போனை எடுக்கவில்லை. பின் வலியால் துடிப்பதை பார்த்து ராதிகா ஹாஸ்பிட்டலுக்கு ஜெனியை அழைத்து செல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் ராதிகா நடந்த விஷயத்தை பாக்யாவுக்கு கால் பண்ணி சொல்கிறார். பாக்கியா இதை கேட்டு உடனே அதிர்ந்து போய் விடுகிறார். பின் டாக்டரிடம் ஜெனி எப்படி இருக்கிறார் என்று ராதிகா கேட்க அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்கிறார். பிறகு ராதிகா ஜெனியிடம் இப்போ உனக்கு எப்படி இருக்கு என்று கேட்டு பரவாயில்லை என்று சொல்லிவிட்டு நீங்க இல்லன்னா நானும் பாப்பாவும் என்ன ஆகிருப்போம்னு தெரியல என்று கூறுகிறார்.

‘எனது முதல் காதல்’….,நெகிழ்ச்சியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா….,

பின் ஹாஸ்பிட்டலுக்கு ஜெனியும், செழியனும் ஓடி வர அவர்கள் வருவதை பார்த்து ராதிகா ஜெனி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வரும் ஜெனி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா வந்து இப்போ ஜெனிக்கு எப்படி இருக்கிறது என்று கேட்க, அமிர்தா அவங்க வந்துட்டாங்க மேல தான் இருக்காங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி, ராதிகாவிடம் நீ தான் அவளை தள்ளி விட்டாயா? என்று ராதிகாவிடம் கேட்க அவர் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here