தமிழக அரசு பேருந்துகளில் Digital முறையில் டிக்கெட்? போக்குவரத்துத்துறை அறிமுகம்!

0
தமிழக அரசு பேருந்துகளில் Digital முறையில் டிக்கெட்? போக்குவரத்துத்துறை அறிமுகம்!
தமிழக அரசு பேருந்துகளில் Digital முறையில் டிக்கெட்? போக்குவரத்துத்துறை அறிமுகம்!
தமிழக அரசு பேருந்துகளில் Digital முறையில் டிக்கெட்? போக்குவரத்துத்துறை அறிமுகம்!

தமிழக அரசு பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் எனவும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Digital டிக்கெட்:

தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றிற்கு மட்டுமே 1.5 கோடி பேர் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களில் 20,304 பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன. தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பேருந்துகளில் ஆன்லைன் மூலமான பரிவர்த்தனை தான் நடைபெற்று கொண்டிருக்கிறது மற்றும் அனைவருக்கும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆனால், தமிழகத்தில் முன்பதிவு செய்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தவிர மற்ற அனைத்து பயணிகளுக்குமே காதித பயண சீட்டுதான் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளுக்கு காதித பயண சீட்டு வழங்குவதிலும், அதனை கண்காணிப்பதிலும் சில சிக்கல்களும் இருக்கிறது. இதனால், தமிழகத்திலும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், மதுரை மற்றும் கோவை அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்திற்காகவே ரூ.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவற்றின் மூலமாக பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here