தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கிறார்களா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

‘Home Work’ கொடுக்க தடை :

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக கடந்த கல்வியாண்டில், பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில், மீண்டும் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் நேரடி வகுப்புகளும், ஆண்டு இறுதி தேர்வுகளும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் ( ‘Home Work’) கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின் பேரில், பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக தொடக்கக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், அனைத்து வகை பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்யும் பொருட்டு, மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை மாவட்ட கல்வி அதிகாரிகள் யாரும் அது குறித்து தொடக்கக் கல்வித்துறைக்கு அறிக்கை ஏதும் அனுப்பி வைக்கவில்லை. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் கடந்த 3 மாதங்களில் மாவட்டங்களில் ஆய்வு செய்ததை தேதிவாரியாக குறிப்பிட்டு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பள்ளி வாரியாகவும் வீட்டுப் பாடம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்ற விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here