திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் நாளை முதல் விநியோகம்!

0
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - தரிசன டிக்கெட் நாளை முதல் விநியோகம்!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - தரிசன டிக்கெட் நாளை முதல் விநியோகம்!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் நாளை முதல் விநியோகம்!

திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (ஆகஸ்ட் 18) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதையடுத்து கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இவ்வாறு தொடர் விடுமுறையின் காரணமாக கோவிலுக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருகை புரிந்தனர். அதன்படி திருப்பதியில் தொடர் விடுமுறை தினங்களில் 1 லட்சம் பேர் வரை சாமி தரிசனத்திற்கு வந்தனர். இதனால் பக்தர்கள் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20ம் தேதி உறியடி உற்சவமும், ஆகஸ்ட் 29ம் தேதி பலராமர் ஜெயந்தியும், 30ம் தேதி வராஹ ஜெயந்தியும், 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் திருப்பதி கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும், புரட்டாசி மாதம் வரும் பிரம்மோற்சவம் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதனால் இந்த தினங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

இதே போல் அக்டோபர் மாதம் 1ம் தேதி கருட சேவையும், 2ம் தேதி தங்க தேரோட்டமும், 4ம் தேதி தேரோட்டம் மற்றும் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இத்தினத்தில் பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை இலவச தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (ஆகஸ்ட் 18) இணையதளத்தில் வெளியிட இருப்பதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here