நீங்க Interview போறிங்களா?? அப்போ கண்டிப்பா இதை படிங்க.!

0

நேர்காணலுக்கு செல்லும்போது சில விஷயங்களை கடைபிடித்தாலே வேலை நிச்சயம். இந்த காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே Interview செல்லும்போது அனைவர்க்கும் மனதில் சிறிய பதட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

Resume Ready:

நேர்காணலுக்கு மிகவும் முக்கியமானது Resume தான். அதனை நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும். Resume இல் என்னென்ன குறிப்பிட்டிருந்தோமோ அதை பற்றி தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். Resume இல் போலியான எதையும் தெரிவித்திருக்க கூடாது. நம் தகுதிகள் அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நேரம் (Time):

நேர்காணலுக்கு செல்லும்போது நேரம் மிக முக்கியானதாகும். தாமதமாக செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது பதட்டத்தை அதிகரிக்கும். 30 நிமிடம் முன்னதாகவே செல்வது நல்லது பதட்டமில்லாமல் சிறிது தயார் செய்து கொள்ளலாம்.

மேலும் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் நேர்காணலுக்கு போகும் நிறுவனத்தை பற்றிய தகவலை தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க சுலபமாக இருக்கும். பிறகு கேள்விகளுக்கு தயங்கி தயங்கி பதில் சொல்லாமல் தெளிவாக நிமிர்ந்து பதிலளிக்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் கண்டிப்பாக நேர்காணலில் வெற்றி பெறலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here