தோல்வி அடைந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.., மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா?

0

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் வங்கதேச அணி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா VS வங்கதேசம்!!

தெற்காசிய கால்பந்து சம்மேளன சார்பில் கால்பந்து போட்டி நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் சுற்றில் மோதி வருகின்றனர். இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் இரண்டு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தனது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

இந்த கால்பந்து தொடரில் தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த இந்திய அணிக்கு நேற்று நடைபெற்ற போட்டி மிக பெரும் சரிவை ஏற்படுத்தியது. இந்த கடைசி லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வங்காளதேச மூன்று லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி 2 லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் குரூப் A பிரிவில் இடம்பிடித்துள்ள வங்காளதேசம் மற்றும் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் அரையிறுதி ஆட்டத்தில் வருகிற 16-ந் தேதி நேபாள அணியை சந்திக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here