ICC தரவரிசை பட்டியல் வெளியீடு.., மற்ற வீரர்களை தட்டி தூக்கி முன்னேறிய இந்திய வீராங்கனை!!

0

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் இந்திய வீராங்கனைகள் பலர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ICC தரவரிசை பட்டியல்!!

ஆண்கள் தொடரை போலவே பெண்களுக்கும் T20, ஒருநாள், டெஸ்ட் போன்ற தொடர்களில் விளையாடி வருகின்றனர். இதில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீராங்கனைகள் பலர் முன்னேறியுள்ளனர். அதன் படி பேட்டிங்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்திலும், 2 ஆம் இடத்தில் அதே நாட்டைச் சேர்ந்த மெக் லானிங் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய வீராங்கனைகளான மந்தனா 4-வது இடத்திலும், ஷபாலி வர்மா 6-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். ஆனால் இதில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 3 இடங்கள் முன்னேறி 34-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போன்று மற்றொரு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் 4 இடங்கள் முன்னேறி 75-வது இடத்தை தனதாக்கிக்கொண்டார்.இதனை தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டென் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த வரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா ஒரு இடம் பின்தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டெவின் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here