தமிழக பள்ளிகளில் இதுவரை இல்லாத புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!!

0

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் சிற்பி என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைக்க உள்ளார்.

புதிய திட்டம்:

தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க போலீசார், பல தீவிர முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்து அவர்களுக்கு உதவக்கூடிய, சிற்பி என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு துவக்க உள்ளது.

இந்த திட்டத்தில், 8ம் வகுப்பு மாணவர்கள் முதல் தனியாக சீருடை கொடுத்து, பள்ளிகளில் என்சிசி செயல்படுவது போல், மாணவர்கள் காவலர்களுடன் இணைந்து செயல்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக சென்னையில் 100 மாநகராட்சிகளில் உள்ள 50 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் விரைவில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here