அமெரிக்காவில் பத்ம பூஷன் விருது பெற்ற இந்தியர்.,, குவியும் வாழ்த்துமழை!!

0
அமெரிக்காவில் பத்ம பூஷன் விருது பெற்ற இந்தியர்.,, குவியும் வாழ்த்துமழை!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர், சத்ய நாதெல்லா தற்போது முக்கிய விருது ஒன்றை பெற்றுள்ளார்.

முக்கிய விருது:

Google, Microsoft, Twitter, Adobe என மிகப்பெரிய நிறுவனங்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் சிஇஓ பொறுப்பு வகிக்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் பிறந்த நாதெல்லா பிப்ரவரி 2014 இல் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜூன் 2021 இல், அவர் நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார், மேலும் அவர் குழுவிற்கான நிகழ்ச்சி நிரலை அமைக்கும் பணியை வழிநடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரக தூதர் டாக்டர் டி.வி. நாகேந்திர பிரசாத்திடம், 3 வது உயரிய சிவிலியன் விருதான “பத்ம பூஷன்” விருதை பெற்றார். அதாவது பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் போட்ட உத்தரவு! அமைச்சர் அன்பில் மகேஷ் மகிழ்ச்சி!!

மேலும் இது குறித்து பேசிய சத்யா நாதெல்லா, இந்த விருது தனக்கு கிடைத்தது மிகப்பெரிய பெருமை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் பல சாதனைகளை அடைய இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இவர் ஜனவரியில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here