WC T20 2022..! – இந்திய அணியின் பலம், பலவீனம் இது தான்.., மேட்சுக்கு முன்னாடி முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!

0
WC T20 2022..! - இந்திய அணியின் பலம், பலவீனம் இது தான்.., மேட்சுக்கு முன்னாடி முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!
WC T20 2022..! - இந்திய அணியின் பலம், பலவீனம் இது தான்.., மேட்சுக்கு முன்னாடி முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!

சர்வதேச T20 உலக கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றிய ஒரு தொகுப்பை இப்பதிவில் காணலாம்.

T20 உலக கோப்பை :

சர்வதேச T20 உலக கோப்பை தொடரின் தகுதி சுற்று ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றிய ஒரு அலசலை பார்க்கலாம்.

இந்திய அணியின் பலம்:

இது வரை நடைபெற்ற T20 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி 2 முறை பைனலுக்கு சென்றுள்ளது. அதில் 1 முறை கோப்பையையும் வென்றுள்ளது. ICC பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ள சூர்யா குமார யாதவ் இந்திய அணியில் இருப்பது கூடுதல் பலம். அதே போல கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பான டாப் ஆர்டர் வரிசை உள்ளது. ஒரு அணிக்கு ஒரு பினிஷர் இருப்பதே சிறப்பான ஒன்று ஆனால் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற இரண்டு பினிஷர்கள் உள்ளது சிறப்புக்குரியது.

இந்திய அணியின் பலவீனம்:

என்ன தான் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வரிசை வலுவாக இருந்தாலும் இடது கை பேட்ஸ்மேன் இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது. ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்த அணியின் பீல்டிங் மோசமாக உள்ளது. இதை சீரமைத்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு முன்னேற முடியும். தொடர்ந்து காயத்தால் அணியின் நட்சத்திர வீரர்கள் தொடரை விட்டு விலகி வருகின்றனர். குறிப்பாக கடந்த வருடம் உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் பந்துவீச்சு துறை படுமோசமாக உள்ளது. இவை சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் தொடர்ந்தது. இந்த தொடரில் இதை சரி செய்தால் மட்டுமே இந்திய அணியால் கோப்பை வெல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here