தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை., ரூ.200 அபராதம் – கடுமையான உத்தரவை பிறப்பித்த அரசு!!

0
தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை., ரூ.200 அபராதம் - கடுமையான உத்தரவை பிறப்பித்த அரசு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலத்தில் பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனையும், ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சிறை தண்டனை:

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. தீபாவளி என்றாலே நமக்கு பலகாரமும் பட்டாசும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒன்றிப்போன, பட்டாசுகளை வெடிக்க டெல்லி அரசு வருகிற ஜனவரி 1ம் தேதி வரை தடை விதித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிப்பதாக அரசு அண்மையில் விளக்கமளித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த அறிவிப்பை மேலும் கடுமையாக்க புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி டெல்லியில் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ 6 மாத சிறை தண்டனை , ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை.,, இவர்களுக்கு ‘போனஸ்’ இருக்கு., தமிழக அரசின் சூப்பரான உத்தரவு!!

இதுபோக பட்டாசு தயாரித்தாலோ அல்லது விற்றாலோ ரூபாய் 5000 அபராதமும், 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த செய்தி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here