அட்ரா சக்க.,5G சேவையால் இவ்ளோ பெரிய மாற்றமா? 34% புதிய வேலை வாய்ப்புகள் அதிரடி உருவாக்கம்!!

0
அட்ரா சக்க.,5G சேவையால் இவ்ளோ பெரிய மாற்றமா? 34% புதிய வேலை வாய்ப்புகள் அதிரடி உருவாக்கம்!!
அட்ரா சக்க.,5G சேவையால் இவ்ளோ பெரிய மாற்றமா? 34% புதிய வேலை வாய்ப்புகள் அதிரடி உருவாக்கம்!!

இந்தியா முழுவதும் 5G இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனால் இதுவரை இல்லாத மிகப்பெரிய வேலைவாய்ப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு மாற்றம் :

இந்தியா தனது தகவல் தொடர்பு வளர்ச்சியில், அடுத்த கட்டத்தை எட்ட கடந்த சில தினங்களுக்கு முன் 5g இணைய சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அதிவிரைவு நெட்வொர்க், அடுத்த ஆண்டுக்குள் அனைவருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, கடந்த 12 மாதங்களில் 5g சேவை வந்த பிறகு வேலை வாய்ப்புகள் 33.7% அதிகரித்துள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் வரை வெறும் 16%மட்டுமே இருந்த இந்த வேலை வாய்ப்புகள், இந்த இணைய சேவை வந்த ஒரே மாதத்திற்குள் அபரிவித வளர்ச்சியை எட்டி இருப்பது தொழில்நுட்ப வல்லுனர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை., ரூ.200 அபராதம் – கடுமையான உத்தரவை பிறப்பித்த அரசு!!

டெக்னிக்கல் சப்போர்ட்டர், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி மற்றும் பிபிஓ எக்ஸிக்யூட்டிவ் போன்ற பணிகளுக்கு சம்பளம் சராசரியாக ரூ. 3,53,298, ரூ. 3,29,520 மற்றும் ரூ. 3,06,680 இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசிய இந்தியாவின் தொழில் நிபுணர் சௌமித்ரா சந்த் , இந்த வேலை வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்றும், இதில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புதிய வளர்ச்சி, டெக் துறையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here