ஜேஸ்மினுக்கு அடித்த ஜாக்பாட், வெண்கலத்தால் கிடைத்த ராணுவ வேலை.., உற்சாகத்தில் இந்திய வீராங்கனை!!

0
ஜேஸ்மினுக்கு அடித்த ஜாக்பாட், வெண்கலத்தால் கிடைத்த ராணுவ வேலை.., உற்சாகத்தில் இந்திய வீராங்கனை!!

அண்மையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய வீராங்கனைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இந்திய ராணுவம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அண்மையில் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். அந்த வகையில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனையான ஜேஸ்மின் லம்போரியா 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் ஜேஸ்மின் லம்போரியா, இங்கிலாந்தின் ஜெம்மா பைஜ் ரிச்சர்ட்சனை எதிர்கொண்டு தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். இந்த போட்டியில் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்ததன் மூலம் இந்திய ராணுவம் மிகப்பெரிய சர்ப்ரைஸை அளித்துள்ளது. அதாவது வெண்கல பதக்கம் வென்ற இவரை இந்திய ராணுவ அமைப்பு ‘மிஷன் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தில் ராணுவ காவல் படையின் ஹவில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமா தாமசை பின்னுக்கு தள்ளிய தமிழக பெண்., தொடர்ந்து குவியும் தங்கம்., முதலிடம் பிடிக்குமா தமிழகம்!!

இந்த செய்தியை கேட்ட அவர் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். மேலும் இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இவர் காமன்வெல்த்தில் மட்டுமல்லாமல் கேலோ இந்தியா யூத் கேம்ஸ், மகளிர் உலக குத்துச்சண்டை, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் பல பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here