IND vs PAK WC 2024: 1.86 கோடிக்கு டிக்கெட் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

2024 T20 உலக கோப்பைத் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் வெளியிட்டது. அந்த வெளியான அறிவிப்பில் இத்தொடர் வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 29ஆம் தேதி அரங்கேற உள்ளது. மொத்தமாக 55 T20 போட்டிகளை கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகின்றன.


அடேங்கப்பா., “ மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தின் வசூல் இத்தனை கோடியா? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

இந்த நிலையில் இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது  நியூயோர்க்கில் நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை ரூபாய் 41 லட்சத்திலிருந்து, ரூபாய் 1.86 கோடி வரை கள்ளச்சந்தையில் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் 2 மணி நேரம் காத்திருந்து 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடிவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. தற்போது இத்தகவல் இணையத்தில் காட்டு தீ பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here