அடேங்கப்பா., “ மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தின் வசூல் இத்தனை கோடியா? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

0
அடேங்கப்பா., “ மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தின் வசூல் இத்தனை கோடியா? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

தென்னிந்தியா சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்..  வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மேலும் இதில் குண படத்தின் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடல் இடம்பெற்றுள்ளதால் தமிழக ரசிகர்களை அதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here