இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல் – ஆஸி.,க்கு 162 ரன்கள் இலக்கு!!

0

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதனால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மைதானத்தில் இன்று முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் (51), சஞ்சு சாம்சன் (23), ரவீந்தர் ஜடேஜா (44), ஹர்திக் பாண்ட்யா (16) தவிர்த்து பிற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஹென்றியூஸ் 3, ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

இன்றைக்கு தங்க நகை வாங்கலாமா?? வேணாமா??

கான்பெர்ரா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 162 ரன்கள் இலக்கு என்பது ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களுக்கு எளிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் பவுலிங்கில் அதிரடி காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here