அதிமுக.,வுடன் ரஜினி கூட்டணியா?? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

0

ரஜினி கட்சி துவக்குவது மற்றும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரஜினியின் புதிய கட்சி:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு தற்போதே அனைத்து கட்சிகளும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பங்கேற்று வெற்றி அடைந்தால் தான் அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் அரியணையை அலங்கரிக்க முடியும். இதற்கான தீவிர முயற்சியில் அனைவரும் இறங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் போட்டியிடவுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று தான் ரஜினிகாந்த் தான் இந்த தேர்தலில் பங்கேற்பது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதே போல் புதிய கட்சி குறித்த விவரங்களை வரும் 31 ஆம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது கட்சி குறித்த அறிவிப்பினை அறிவித்ததும், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லையா??

அப்போது தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின், செய்தியாளர்களிடம் பேசும்போது ரஜினியுடன் வாய்ப்பு கிடைத்தால் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்திருந்தார். இது நேற்று பரவலாக பேசப்பட்டது. இதனை அடுத்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசும்போது பன்னீர்செல்வம் தனது கருத்தினை தான் தெரிவித்துள்ளதாகவும், அது கட்சியின் கருத்து கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here