அடிச்சது ஜாக்பாட்., நாடு முழுவதும் தியேட்டர் டிக்கெட் வெறும் 75 ரூபாய் தான் – அதிரடி அறிவிப்பு!!

0
அடிச்சது ஜாக்பாட்., நாடு முழுவதும் தியேட்டர் டிக்கெட் வெறும் 75 ரூபாய் தான் - அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும், தேசிய சினிமா தினம் வருகிற செப்டம்பர் 16ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக அதிரடி ஆஃபர் ஒன்றை திரையரங்குகள் அறிவித்துள்ளது.

அதிரடி ஆஃபர்:

கொரோனா ஊரடங்குக்கு பின், திரையரங்குகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்பட்டு புதுப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. பெரும்பாலான படங்கள், கொரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியானதால், திரையரங்குகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, கொரோனா கொஞ்சம் குறைந்துள்ளதால் பெரும்பாலான படங்கள் திரையரங்கத்தில் வெளியிடப்படுகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில் வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி, தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில், அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரைப்படம் மூலம் ஒன்று சேர்க்க மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த, முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினி போலிஸ் உள்ளிட்ட பல  முன்னணி திரையரங்குகள் பங்கேற்றுள்ளதாகவும், இந்த தியேட்டர்களில் எல்லாம் வரும் செப்.16ல் வெறும் 75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது என்பதும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here