இந்திய அணியில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய போட்டியாளர்.., நிரந்தர ஓய்வு அளிக்கவுள்ள கிரிக்கெட் வாரியம்?

0
இந்திய அணியில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய போட்டியாளர்.., நிரந்தர ஓய்வு அளிக்கப்போகும் கிரிக்கெட் வாரியம்?
இந்திய அணியில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய போட்டியாளர்.., நிரந்தர ஓய்வு அளிக்கப்போகும் கிரிக்கெட் வாரியம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து காயம் காரணமாக அனைத்து தொடர்களில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது ஆசிய கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜா விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதன்படி ஆசிய கோப்பை தொடரில் எதிர்கொண்ட பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை எளிதாக வீழ்த்தி தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் நாளை பாகிஸ்தான் அணியை இந்திய அணி மீண்டும் சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதைக் கேட்ட ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவர் இது போன்று செய்வது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக நடைபெற்ற IPL மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களில் இருந்தும் காயம் காரணமாக விலகி உள்ளார். இந்நிலையில் ஜடேஜா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதில் அக்சர் பட்டேல் அணியில் இடம்பிடிக்க உள்ளார்.

இவர் இது போன்று தொடர்ந்து செய்து வருவதால் இந்திய கிரிக்கெட் நிறுவனத்திற்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜடேஜாவின் பார்மும் தற்போது குறைந்து கொண்டே போகிறது. ஜடேஜா இதுபோன்று செய்து வந்தால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவருக்கு ஓய்வு அளிக்க கூட தயங்க மாட்டார்கள் என்று தான் தெரிகிறது. எனவே ஜடேஜா இனி வரும் போட்டிகளில் ஆவது சிறப்பாக விளையாடி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here