இந்தியா-சீனா எல்லை பிரச்சனை – இன்று 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்!!

0

இந்தியா மற்றும் சீனா நாட்டவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் இன்று 10வது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.

இந்தியா சீனா:

இந்தியா மற்றும் சீனா நாட்டவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் இரு நாட்டு வீரர்களும் தங்களது உயிரை இழந்தனர். மேலும் கொரோனா வைரஸை சீனா நாடு தான் பரப்பியது என்ற தகவலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லையில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் இரு நாட்டு காமெண்டர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரை இவர்களுக்கு இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மேலும் இதன்மூலம் கிழக்கு லடாக்கில் பான்கான் சோ ஏறி பகுதியில் முதல் கட்டமாக படை விளக்கம் நடைபெற்றது. அதில் கூறியது போலவே வடக்கு கரையில் உள்ள 4ம் மலை முகடு வரை இந்தியா படைகள் பின்வாங்கினர். அதேபோல் 8ம் மலை முகடு வரை சீனா பின்வாங்கியது.

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி – 11 ரயில்கள் ரத்து!! முழுவிபரம்!!

மேலும் அங்குள்ள ஹெலிகாப்டர் இறக்கு தளத்தையும் சீனா விளக்கியுள்ளது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இரு நாட்டு காமெண்டர்களும் தற்போது 10வது சுற்று பேச்சுவார்த்தையை இன்று நடத்தவுள்ளனர். இதனை இன்று காலை 10 மணி அளவில் பாங்கங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதிக்கு அருகே உள்ள சுசூல் அருகே மோல்டா என்ற இடத்தில் வைத்து நடத்தவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here