T20 யின் கேப்டனான ஹர்திக் பாண்டியா?? ரோஹித் இனி அவ்வளவு தானா??

0
T20 யின் கேப்டனான ஹர்திக் பாண்டியா?? ரோஹித் இனி அவ்வளவு தானா??
T20 யின் கேப்டனான ஹர்திக் பாண்டியா?? ரோஹித் இனி அவ்வளவு தானா??

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs SL:

பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த தொடரில், முதல் டெஸ்ட்டை கைப்பற்றிய இந்திய அணி, 2வது டெஸ்ட்டையும் வெல்லும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடருக்கு பிறகு, இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கட்டை வீரர் காயத்தால், பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

விராட் கோலி, புஜாரா சாராரி குறைந்ததற்கு இது தான் முக்கிய காரணம்…, வெளிப்படையாக கூறிய ரஹானே!!

இவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால், இலங்கைக்கு எதிரான தொடருக்குள் இவரது காயம் சரியாக வில்லை என்றால், இந்த தொடரை ரோஹித் சர்மா இழக்க கூடும். இவர் இல்லாத பட்சத்தில், ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியை வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here