IND vs SA T20: உலக கோப்பைக்கு முன் தென் ஆப்ரிக்கா தொடரை வென்று அசத்திய இந்திய இளம் படை!!

0
IND vs SA T20: உலக கோப்பைக்கு முன் தென் ஆப்ரிக்கா தொடரை வென்று அசத்திய இந்திய இளம் படை!!
IND vs SA T20: உலக கோப்பைக்கு முன் தென் ஆப்ரிக்கா தொடரை வென்று அசத்திய இந்திய இளம் படை!!

டி20 உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய U19 பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்து அசத்தி உள்ளது.

இந்திய U19 பெண்கள் அணி:

பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணியானது வரும் 19ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரில் விளையாட இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு முன், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியானது, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிட்டது. இந்த தொடரில், முதல் போட்டியை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, 2 வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து, 3வது மற்றும் 4வது போட்டியையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரின் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா அணியை 54 ரன்களுக்குள் சுருட்டியது. இந்த எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய பெண்கள் அணி 4-0 என்ற வெற்றி கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை தொடருக்கு முன், ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய U19 பெண்கள் அணி இந்த கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here