10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா…, இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!!

0
10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா..., இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!!

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டி20 உலக கோப்பை:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பவுலிங்கை தேர்வு செய்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்களில், கே எல் ராகுல் (5), ரோஹித் சர்மா (27), சூர்யகுமார் யாதவ் (14) என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால், இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த விராட் கோஹ்லி மற்றும் ஹர்திக் பாண்டியா போராடினர். இதில், விராட் கோஹ்லி அரைசதம் அடித்து வெளியேற, ஹர்திக் பாண்டிய அதிரடியாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 63 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதன் மூலம், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து சார்பாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில், ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 80* ரன்கள் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் 45 பந்தில் 3 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 81* ரன்கள் என அதிரடியாக விளையாடி இருந்தனர். இதையடுத்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here