TNPSC குரூப் 1 2022 ஹால் டிக்கெட் வெளியீடு.,, பதிவிறக்கம் செய்வது எப்படி?முழு விவரம்!!

0
TNPSC குரூப் 1 2022 ஹால் டிக்கெட் வெளியீடு.,, பதிவிறக்கம் செய்வது எப்படி?முழு விவரம்!!
TNPSC குரூப் 1 2022 ஹால் டிக்கெட் வெளியீடு.,, பதிவிறக்கம் செய்வது எப்படி?முழு விவரம்!!

TNPSC குரூப் 1 முதற்கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC குரூப் 1:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அந்த வகையில் இந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் மொத்தம் 92 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் குரூப் 1 முதற்கட்டத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த குரூப் 1 முதற்கட்டத் தேர்வு முதலில் அக்.,30 2022 அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குரூப் 1 பிரிலிமினரி தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை எதிர்நோக்கி விண்ணப்பததார்கள் காத்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக குரூப் 1 பிரிலிமினரி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. இதை விண்ணப்பதாரர்கள் (நவம்பர் 10, 2022) இன்று முதல் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் குரூப் 1 ஹால் டிக்கெட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறை பதிவு உள்நுழைவு பகுதி மூலம் வழங்கப்படுகிறது.

10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா…, இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!!

TNPSC குரூப் 1 ஹால் டிக்கெட் 2022ஐப் பதிவிறக்கம்:

  • விண்ணப்பதாரர்கள் @apply.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
  • பின்னர் ஒரு முறை பதிவு மற்றும் டாஷ்போர்டை கிளிக் செய்ய வேண்டும்;
    அடுத்து பதிவுசெய்த பயனர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
  • உங்கள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • பின் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொது கொடுக்கப்பட்ட வடிவத்தில் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கவும்.
  • இதையடுத்து ஹால் டிக்கெட்டை பிரிண்ட் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here