
பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது டெஸ்டில் இந்திய அணி துணை கேப்டன் இல்லாமல் விளையாடி வருகிறது.
IND vs AUS:
இந்தியா அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது டெஸ்ட் போட்டியை இந்தூரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், கே எல் ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு பதில், சுப்மன் கில் மற்றும் உமேஷ் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், பிளேயிங் லெவனில் கே எல் ராகுல் இடத்தை சுப்மன் கில் நிரப்பினாலும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வியும் மறுபுறம் எழுந்து வந்தது. நடந்து வரும் இந்த 3வது டெஸ்டில் இந்திய அணி துணை கேப்டன் இல்லாமலேயே விளையாடி வருகிறது. இதையடுத்து, தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது.
எதிரணியை 3 கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான் சிட்டி…, காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!
முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ள இந்திய அணியில், ரோஹித் சர்மா (12), சுப்மன் கில் (21), புஜாரா (1), ஜடேஜா (4) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (0) ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மேத்யூ குஹ்னெமன் மற்றும் நாதன் லியோன் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளனர். இதனால், இந்திய அணி 11.2 ஓவரில் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி உள்ளது.