எதிரணியை 3 கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான் சிட்டி…, காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

0
எதிரணியை 3 கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான் சிட்டி..., காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!
எதிரணியை 3 கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான் சிட்டி..., காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

FA கப் தொடரின் 5வது சுற்றில், பிரபலமான மான் சிட்டி அணியானது பிரிஸ்டல் சிட்டி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

FA கப்:

பிரீமியர் லீக்கின் ஒரு பகுதியான FA கப் தொடரின் 5வது சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கான வாய்ப்பை பெறும் என்பதால், போட்டியிடும் அணிகள் வெற்றிக்காக போராடி வருகின்றனர். இந்த வகையில், இன்று பிரபலமான மான் சிட்டி அணியானது, பிரிஸ்டல் சிட்டி அணியை எதிர்த்து போட்டியிட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், மான் சிட்டி அணியானது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால், ஆட்டத்தின் 7 வது நிமிடத்திலேயே மான் சிட்டி அணியின் பில் ஃபோடன் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதையடுத்து, பிரிஸ்டல் சிட்டி அணி கோல் அடிக்க பல முறை முயற்சித்த போதும் தோல்வியிலேயே முடிந்ததால், மான் சிட்டி அணியானது ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.

IND vs AUS Test : பறிபோன கே எல் ராகுல் இடம்.,தட்டிப் பறித்த சுப்மன் கில்.,இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!!

இதனை தொடர்ந்து, தொடங்கப்பட்ட 2வது பாதியில் மீண்டும் பில் ஃபோடன் 74 வது நிமிடத்தில் கோல் அடிக்க, 81 வது நிமிடத்தில் கெவின் டி ப்ரூய்ன் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், மான் சிட்டி அணியானது, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here