அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி – கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?

0
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி - கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி - கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?

ஊரடங்கு காலத்திலும் உலக பணக்காரர் பட்டியலில் உள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களின் மதிப்பானது வளர்ச்சியடைந்துள்ளது. முக்கியமாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 829% உயர்வு பெற்றுள்ளது.

கவுதம் அதானி:

குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம் அதானி குழுமம் ஆகும். இந்நிறுவனமானது கவுதம் அதானி என்பவரால் துவங்கப்பட்டது. அதானி, இவர் துணி வியாபாரியின் மகன். தற்போது தனது அயராத உழைப்பால் உலகின் டாப் 20 பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி - கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி – கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?

மேலும் ஊரடங்கில் சாதாரண மக்கள் அனைவரும் வறுமைக்கு ஆளான நிலையில் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பானது அபார வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பணக்காரர்களின் பட்டியலில் 16 வது இடம் பிடித்த இந்தியாவின் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 829% வளர்ச்சி அடைந்து தற்போது இவரின் சொத்தானது ரூ.4.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி - கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி – கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?

அமெரிக்க வணிக இதழான ப்ளூம்பர்க் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் உலகின் நம்பர் 1 பணக்காரரான ஜெஃப் பெசோஸ்-ன் சொத்துக்களே 66% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதானியின் சொத்து மதிப்பின் வளர்ச்சி உலக தொழில் அதிபர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்தது மதிப்பும் கொரோனா காலகட்டத்தில் 115% உயர்ந்து ரூ.6.27 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here