காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 அபராத நோட்டீஸ்., வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!!!

0
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 அபராத நோட்டீஸ்., வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சுமார் ரூ.1,700 கோடி அபராதம் கட்ட வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுக்கக் கூடாது.” என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அபராதத்தை வசூல் செய்வதற்கான நடவடிக்கையை, தற்போது எடுக்க மாட்டோம் என அரசு வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பான் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்களது கார்டு ரத்து செய்யப்படும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here