
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், இறுதி ஆண்டு தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து, கோடை விடுமுறையை மாணவர்கள் உற்சாகமாக களித்து வருகின்றனர். இந்த கோடை விடுமுறைக்கு பிறகு, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளி வகுப்புகள் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, கோடை விடுமுறைக்கும், பள்ளித் தீர்ப்புக்கும் இடைப்பட்ட இந்த நாட்களை, பயன்படுத்தி பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய கட்டிட சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை முடிப்பதற்காக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ், பள்ளியின் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதுடன், குடிநீர், கழிவறை வசதிகளையும் குறைபாடு இல்லாமல் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பழைய காகித முறையை பயன்படுத்தி கொண்டு இருக்காமல், டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். EMIS இணையதள பயன்பாட்டை அதிகரித்து, வரும் கல்வியாண்டை முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி, அரசு பள்ளிகளின் நிலையை உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.