
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகழ்பெற்ற கோவில் ஸ்தலங்களில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் வருகிற மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி வர உள்ளதால் சிவாலயம் உள்ளிட்ட பல்வேறு இந்து ஸ்தலங்களில் திருவிழா, சிறப்பு பூஜைகள் என கோலகலமாக கொண்டாடுவார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதிலும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். இவர்கள் கூட்ட நெரிசலில் அவதியுறாமல் எளிய முறையில் பயணங்களை மேற்கொள்ள முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(01.05.2023) – முழு விவரம் உள்ளே!!
அதன்படி தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை வருவதற்கு 2,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.