தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

0

தமிழகத்தில் மதுரை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், தேனி, திண்டுக்கல் , பெரம்பலூர், மதுரை, மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 16 தமிழக வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 34 டிகிரி, குறைந்தபட்சமாக 25 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டு உள்ளது.

கொரோனா இருப்பதாக நினைத்து பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பலி – உ.பி.யில் கொடூரம்!!

கர்நாடக, லட்சத்தீவு பகுதிகளில் இன்றும், நாளையும் 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 10 முதல் 14ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here