பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், மாநிலங்கள் துப்பாக்கிகளை வாங்க வேண்டுமா??? – முதலமைச்சர் கேள்வி!!

0

பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் தான் தங்களது சொந்த ஆயுதங்களை வாங்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவேக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்து வருகின்றன. ஏற்கனவே மத்திய அரசு பெற்ற மருந்துகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் பகிர்ந்து கொடுத்தது. அந்த மருந்துகள் பல மாநிலங்களில் தீர்ந்துவிட்டன.

தற்போது நாட்டில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு பற்றி டெல்லி முதல்வர் கூறியதாவது “ஒவ்வொரு மாநில முதல்வரும் தடுப்பூசிகளை வாங்க முயற்சித்தார்கள், ஆனால் இதுவரை அவற்றை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் பேச மறுத்து விட்டன. பல மாநிலங்கள் உலகளாவிய டெண்டர்களை எடுத்தன, ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது, ”என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுதால், மாநிலங்களை போரை சமாளிக்க சொல்லி விட்டுவிடுவீர்களா?? உத்தர பிரதேசம் பீரங்கி குண்டுகளையும் அல்லது டெல்லி துப்பாக்கிகளையும் வாங்க வேண்டுமா?” என்று மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here