ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் – ஐசிஎம்ஆர் ..!

0

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,985,656 உள்ளனர். மேலும் 5,24,088 பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,140,827 பேர் சிகிச்சை பெற்று வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரானா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,225 பேரை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு மொத்த 6,27,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 379,902 பேர் குணமாடைந்துள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து..!

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் போராடி வருகிறது. இதிலும் பல நாடுகள் முதல்கட்ட பணியில் உள்ளது.

இதனிடையே இந்தியாவில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிக்கும் பணியில் ஈடுபட்டு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதாவது ஜூலை 7ம் தேதிக்குள் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை விரிவுபடுத்த வலியுறுத்தியுள்ளது. மேலும் சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here