டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான தேதி வெளியீடு – ICC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0

டி20 உலக கோப்பை நடைபெறுவதற்கான அதிகாரப்பூர்வ தேதியை ஐசிசி அறிவித்து உள்ளது. அதன்படி இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டிற்கான டி20 உலக கோப்பை  போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால்  கொரோனா தொற்று  பரவல் காரணமாக இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது குறித்து சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில் அந்த போட்டிகளுக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த போட்டிகள் நடைபெறுவதற்கான தேதிகள் பற்றி எந்தவித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது, இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க உள்ளது உறுதியாகிய நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை  ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதாவது இந்த போட்டிகள்  அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது என ஐசிசி தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த போட்டிகள் சர்வதேச துபாய் மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம் போன்ற  நான்கு மைதானங்களில் நடைபெற உள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி  உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here