அசர வைக்கும் அம்சங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய படகு… விலை 60 கோடி டாலர்!!

0
60 கோடி டாலர் மதிப்புள்ள உலகிலேயே மிகப்பெரிய படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய பிரமிக்கவைக்கும் அம்சங்களை இதன் வடிவமைப்பாளர்கள் நேற்று (ஜூன், 28 2021) வெளியிட்டுள்ளனர். அதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மேலே உள்ள உலகின் மிகப்பெரிய படகான இதற்கு சோம்னியோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 60 கோடி டாலர். இந்த படகு மொத்தம் 728 அடி நீளம் உள்ளது. இந்த படகில் மொத்தம் 39 அப்பார்ட்மெண்டுகள் உள்ளது. ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டின் விலை 11.2 மில்லியன் டாலர்.
ஒவ்வொரு அப்பார்ட்மென்டிலும் தனிப்பட்ட ஜிம், நூலகம் உள்ளது. மேலும் ரெஸ்டாரண்டுகள்,பார்கள் போன்ற வசதிகளும் இந்த படகில் உள்ளன. இந்த படகு வடிவமைப்பு திட்டத்தின் தலைவர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சோம்னியோ குளோபல் நிறுவனத்தின் பொறுப்பாளர் கார்ல் லு சோஃப் ஆவர். இந்த படகு 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய படகாக இருப்பது அஸ்ஸாம் என்ற படகு. இது 2013 இல் கட்டப்பட்டது ஆனால் இந்த படகு வெறும் 600 அடி நீளம் கொண்டது. ஆனால் சோம்னியோ படகின் நீளம் 728 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here