2 நாளில் 4 மில்லியனை கடந்து விஜய் டிவி சீரியல் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் யூடுப்பில் பெரும் சாதனையை படைத்து அசதியுள்ளது. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் பல சீரியல்கள் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில சீரியல்கள் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் பிரவீன் பென்னெட்டின் சீரியல்கள் தான். இவர் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல்களை இயக்கி வருகிறார்.

இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. பாரதி கண்ணம்மாவிலும் ஹேமாவை காணாமல் தேடும் எபிசோடு விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. ராஜா ராணி 2 சீரியலிலும் அர்ச்சனா கிட்டத்தட்ட மாட்டிவிட்டார்.

barathi kannamma
barathi kannamma

அவர் செய்த அனைத்து விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர சிவகாமி அதிர்ச்சியடைந்தார். இன்னும் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தது அர்ச்சனா தான் என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

மேலும் விஜய் டிவி கடந்த வாரம் ஞாயிற்று கிழமை இந்த 2 சீரியல் ப்ரோமோவையும் வெளியிட்டது. 2 நாட்களில் 4 மில்லியனை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல ராஜா ராணி சீரியல் ப்ரோமோவும் 4 மில்லியன் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் எந்த ப்ரோமோவிற்கும் கிடைத்த அந்தஸ்தை இந்த சீரியல் பெற்றுள்ளதால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here