ஐசிசி தரவரிசை: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், கில் T20யில் முன்னிலை…, யார் யாருக்கு எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!

0
ஐசிசி தரவரிசை: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், கில் T20யில் முன்னிலை..., யார் யாருக்கு எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!
ஐசிசி தரவரிசை: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், கில் T20யில் முன்னிலை..., யார் யாருக்கு எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியில், அசத்திய இந்திய வீரர்கள் ஐசிசியின் டி20க்கான தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஐசிசி:

ஐசிசியானது வாரந்தோறும், கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப, தரவரிசையை புதுப்பித்து வருகின்றன. இந்த வகையில், கடந்த வார இறுதியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியை விளையாடியது. இதில், இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 30 ரன்களை அடித்ததுடன், 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ஹர்திக் பாண்டியா ஓர் இடம் முன்னேறி 250 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல, டி20 பவுலர்களுக்கான தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் 8 இடங்கள் முன்னேறி 635 புள்ளிகளுடன் 13 வது இடத்தையும், ஹர்திக் பாண்டியா 20 இடங்கள் முன்னேறி 46 வது இடத்தையும் எட்டியுள்ளனர்.

IND vs AUS: விளையாடும் லெவனில் சூர்யகுமார்?? தென் ஆப்பிரிக்கா வீரர் கொடுத்த ஹிண்ட்!!

டி20யின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், சூர்யகுமார் யாதவ் 906 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த, சுப்மன் கில் 542 புள்ளிகளுடன் 30 வது இடத்தையும், ஹர்திக் பாண்டியா 3 இடங்கள் முன்னேறி 50 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here