ஐசிசி தரவரிசை வெளியீடு: முதலிடத்தை எதிர்நோக்கி கேன் வில்லியம்சன்…, இந்திய வீரர்களின் இடம் எங்கே??

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: முதலிடத்தை எதிர்நோக்கி கேன் வில்லியம்சன்..., இந்திய வீரர்களின் இடம் எங்கே??
ஐசிசி தரவரிசை வெளியீடு: முதலிடத்தை எதிர்நோக்கி கேன் வில்லியம்சன்..., இந்திய வீரர்களின் இடம் எங்கே??

ஐசிசியானது கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி தரவரிசை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங்கானது, கடந்த வாரம் நடைபெற்ற மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்துள்ளது. இதன்படி, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில், இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 4 இடங்கள் முன்னேறி 883 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பட்டியலில், இந்திய வீரர்கள், ரிஷப் பண்ட் (9), ரோஹித் சர்மா (11), விராட் கோலி (13) என டாப் 20 யில் இடம் பிடித்துள்ளனர். டெஸ்டின் பவுலர்களுக்கான தரவரிசையில், அஸ்வின் முதலிடத்திலும், பும்ரா (7) மற்றும் ஜடேஜா (9) இடத்தை பிடித்து டாப் 10ல் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், முதல் இரு இடங்களில் ஜடேஜா மற்றும் அஸ்வினும், 4 வது இடத்தில் அக்சார் பட்டேலும் தங்களது இடத்தை தக்க வைத்து உள்ளனர்.

தகுதி அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000.., முதல்வரை கலாய்த்து வைரலாகும் வீடியோ!!

இதை போன்று, ஒருநாள் தொடருக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், சுப்மன் கில் 5வது, விராட் கோலி 7 வது மற்றும் ரோஹித் சர்மா 9வது இடத்திலும் உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில், முகமது சிராஜ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 3 வது இடத்திலும், குல்தீப் யாதவ் 24 மற்றும் பும்ரா 26 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஒருநாள் தொடருக்கான ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்தியா சார்பாக ஹர்திக் பாண்டியா (19) மட்டுமே டாப் 20யில் இடம் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here