தகுதி அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000.., முதல்வரை கலாய்த்து வைரலாகும் வீடியோ!!

0
தகுதி அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000.., முதல்வரை கலாய்த்து வைரலாகும் வீடியோ!!
தகுதி அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000.., முதல்வரை கலாய்த்து வைரலாகும் வீடியோ!!

தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு வழங்க உள்ள ரூ.1000 உரிமை தொகையை கிண்டல் செய்யும் விதமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

மகளிர் உரிமை தொகை

மார்ச் 20 ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்றாக திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியானது. அதன் படி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வரும் செப்டம்பர் 15 லிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த விஷயம் குடும்பத் தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தேர்தல் சமயத்தின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியானவர்கள் மட்டும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சி உட்பட பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்-வாக இருக்கும் சவுக்கு சங்கர் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக கவுண்டமணி செந்தில் நடித்த படத்தின் நகைச்சுவை காட்சியை ஒப்பிட்டு மு.க.ஸ்டாலின் மற்றும் பிடிஆர் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளை இப்படி தான் தேர்ந்தெடுப்பார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ இப்போது #savukuu என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. இதற்கு திமுக நிர்வாகிகள் பலரும் இவரை கைது செய்ய வேண்டும் என்று கூறினர்.

ஜூனியர் ஆர்டிஸ்ட்களிடம் கமிஷன் அடித்த அட்லீ.., இதெல்லாம் ஞாயமா?? அடுக்குமா?? வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் கே.ராஜன்!!

இதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் விதமாக “பேசாம போயிடு. தொட்டுப் பாருங்க. என்ன ஆகுதுன்னு.” என ட்விட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கடுப்பான சவுக்கு சங்கர் அவரை போலவே நானும் இந்த வீடியோவை ட்வீட் செய்கிறேன். முடிஞ்ச என்ன கைது பண்ணுங்க என பதிவிட்டுள்ளார். மேலும் போலீஸ் அனைவரும் ஆளும் கட்சிக்கு கைக்கூலியாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டு சென்னை போலீஸ் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here